
மலையாளப் படங்களைத் திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் சம்மதம்
டிஜிட்டலில் திரைப்படங்களைத் தியேட்டர்களில் திரையிட வி.பி.எப் என்ற கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அந்தப் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். சில தனியார் நிறுவனங்கள் அந்த விபிஎப் கட்டணத்தை அதிகமாக வாங்குவதால் சொந்தமாகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தது மலையாள தயாரிப்பாளர் சங்கம்.
அதன்படி அவர்களது "பிடிசி" என்ற நிறுவனம் மூலம் தியேட்டர்களுக்குத் தேவையான "கன்டென்ட்"களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியது. ஆனால், இந்த புதிய முறைக்கு பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சம்மதிக்கவில்லை. கியூப், யுஎப்ஓ ஆகிய நிறுவனங்களுடன் தாங்கள் ஏற்கெனவே போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி மட்டுமே செயல்படுவோம் என்றது.
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் அவர்களது தியேட்டர்களில் மலையாளப் படங்களைத் திரையிடுவதையும் நிறுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபமாக உருவெடுத்தது. எதிர்காலத்தில் பிவிஆர் நிறுவனத்திற்கு மலையாளப் படங்களைத் தர மாட்டோம் என மலையாளத் திரையுலகக் கூட்டமைப்பு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிவிஆர் நிறுவனம் மலையாளப் படங்களை தொடர்ந்து திரையிட சம்மதம் தெரிவித்தது. புதிதாக திறக்கப்படும் தியேட்டர்களில் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தின் "பிடிசி" மூலம் "கன்டென்ட்"களை வாங்கிக் கொள்ளவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு பிவிஆர் தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட மலையாளப் படக் காட்சிகள் இன்று முதல் நடைபெற உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!