
வாடிவாசல் கைவிடப்படவில்லை : அப்டேட் கொடுத்த வெற்றி மாறன்
ஆனால் அதற்கு பிறகு படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை. வெற்றி மாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் பிசியாகி விட்டனர். கங்குவா, புறநானூறு, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் குறித்த அறிவிப்புகளை சூர்யா வெளியிட்டார். ஆனால், "வாடிவாசல்" குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. வெற்றி மாறன் "விடுதலை" படத்தில் பிசியாகி விட்டார். இதனால் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாகவும், சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி மாறனிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டபோது “பணிகள் முடிந்துவிட்ட "விடுதலை 2" படத்தின் ரிலீஸ் தேதியே எப்போது என்று எனக்குத் தெரியாது. இந்தப் படம் முடிந்த பின் "வாடிவாசல்" பட வேலைகள் உள்ளன. அதன்பிறகு தான் வேறு என்ன படத்தை இயக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். அதனால் "வட சென்னை 2" எப்போது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்றார்.
இதன் மூலம் "வாடிவாசல்" கைவிடப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!