
புஷ்பா 2 ஆடியோ உரிமை இவ்வளவு விலையா ?
"புஷ்பா" படத்தின் முதல் பாகப் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதுதான் இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ உரிமை இந்த அளவிற்கு விற்கக் காரணமாக அமைந்துள்ளதாம்.
இதற்கு முன்பு "ஆர்ஆர்ஆர்" படத்தின் ஆடியோ உரிமை 25 கோடிக்கும், "சாஹோ" படத்தின் ஆடியோ உரிமை 22 கோடிக்கும், "பாகுபலி 2" படத்திற்கு 12 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். அடுத்த சில வாரங்களில் "புஷ்பா 2" படத்தின் மற்ற வியாபார உரிமைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தைக் கொடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!