
100 மில்லியனைக் கடந்த புஷ்பா 2 டீசர்
இப்படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்பட்டது. நான்கு நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த "சலார்" படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து 146 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தற்போது "புஷ்பா 2" டீசர் 107 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வெளிவர இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. அதற்குள் "சலார்" டீசரின் சாதனையை முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரையில் கன்னடப் படமான "கேஜிஎப் 2" படத்தின் டீசர்தான் 274 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனை கடந்த மூன்று வருடங்களாக முறியடிக்கப்படாமல் உள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!