
மரண மாஸ்- தலைப்பே வச்சிட்டாங்க…
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சிவபிரசாத் இயக்குகிறார். பாசில் ஜோசப், ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
டொவினோ தாமஸ் தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பு சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது. அவருடைய ஒரு படத்திற்கு "நடிகர் திலகம்" என தலைப்பு வைத்திருந்தார்கள். சிவாஜி கணேசன் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அத்தலைப்பை "நடிகர்" என மாற்றினார்கள். சிவாஜி மகன் பிரபுவின் வேண்டுகோளை ஏற்று அவரையே புதிய தலைப்பை அறிவிக்க அழைத்திருந்தார்கள்.
மலையாளத்தில் அழகான தலைப்புகளைத்தான் வைப்பார்கள். விஜய் படங்கள் அங்கு நன்றாக ஓடுவதால் அங்கும் இந்த "மாஸ்" டிரெண்ட் தாக்கம் வந்துள்ளது. அடுத்து "கொல மாஸ், தெறி மாஸ்" தலைப்புகளை இங்கு யாராவது பதிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!