
10 மணிநேரம் இசை வெளியீட்டு விழா நடத்தி பார்த்திபன் சாதனை
இதனால் ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக நேரம் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் "டீன்ஸ்" திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே தணிக்கை சான்று வாங்கி அதிலும் சாதனை படைத்தது இந்த படம்.
13 சிறுவர்களை மையமாகக் கொண்ட கதை என்பதால் விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு "டீன்ஸ்" படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது. விழாவில் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், பூர்ணிமா பாக்யராஜ், "டீன்ஸ்" தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், பாடலாசிரியர் மதன் கார்கி, கே.எஸ்.ரவிக்குமார், நடிகை அக்ஷயா உதயகுமார், வனிதா விஜயகுமார், கவுரவ் நாராயணன், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், விதார்த், பேரரசு, ரோபோ சங்கர், யோகி பாபு, கே பாக்யராஜ், தம்பி ராமையா, இசையமைப்பாளர் இமான் உள்பட பலர் பேசினார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!