
அஜித் படத்தில் கமிட்டான ‛ஜெயிலர் நடிகர்
‛குட் பேட் அக்லி" படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், இப்படம் ஒரு காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மற்றொருபுறம் 3 வித கதாபாத்திரங்களுக்கு இடையேயான பயங்கரமான ஆக்சன் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் சுனில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. தெலுங்கில் பிரபலமான நடிகரான சுனில், புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். மாவீரன், ஜெயிலர், ஜப்பான், மார்க் ஆண்டனி என தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!