
‛பீட்சா 4 உருவாகிறது : தமிழுக்கு வரும் தெலுங்கு பிக் பாஸ் ரத்திகா
எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், ஹரி இசை அமைக்கிறார். கே.ஏஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.
படம் பற்றி ஆண்ட்ரூஸ் கூறும்போது, "பீட்சா வெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ். ராட்சசன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ்.ஜே.அர்ஜுன் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் "பீட்சா 4" அமையும்," என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!