
படம் இயக்க தயாராகிறார் ஹரியின் மகன்
இவர்களில் மூத்தவர் ஸ்ரீராம் ஹரி தந்தையை போலவே சினிமா இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். அதற்கான பயிற்சி எடுத்து வந்தார். இந்த நிலையில் அவா "ஹம்" என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். அதோடு அதில் நடித்தும் உள்ளார். ஒரு மணி நேரம் ஓடும் இந்தப் படம் யு-டியூப்பில் வெளியாகி உள்ளது. சஞ்சய்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் கார்மெலஸ் இசையமைத்து உள்ளார்.
படம் பற்றி ஸ்ரீராம் ஹரி கூறும்போது “இந்த படம் மட்டுமல்ல இன்னும் சில குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். பெரிய படம் பண்ணலாம் என்று நினைத்து உருவாக்கியதுதான் "ஹம்". இதனை பைலட் பிலிம் என்றும் சொல்லலாம். இது என்ன ஜானர் படம் என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்களின் மனநிலையை சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட படம் இது. இந்த படத்தை திரைப்படமாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!