
தலைவர் தரிசனம் : நெகிழும் மஞ்சும்மேல் பாய்ஸ் வாரிசு நடிகர்
படத்தில் இடம்பெற்ற நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக நடித்தவர் சந்து சலீம்குமார். இவர் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் சலீம்குமாரின் மகன் என்பது கூடுதல் தகவல். மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் அந்த 10 பேர்களில் ஒரே ஒருவர் மட்டும் அவ்வப்போது தனித்து சென்று ஞானியை போன்று உட்கார்ந்து கொண்டு எதுவும் பேசாமல் திகில் கிளப்புவாரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த சந்து சலீம் குமார்.
இந்தநிலையில் ரஜினியுடனான இந்த சந்திப்பு குறித்து "தலைவர் தரிசனம்" என நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சந்து சலீம்குமார். அதில் “இந்த சந்திப்பின்போது என்னை பார்த்த ரஜினிகாந்த், நீங்க மேலே உட்கார்ந்து இருக்க அந்த பையன் தானே.. ரொம்ப புடிச்சது அந்த கேரக்டர் என்று சரியாக அடையாளம் கண்டுபிடித்து தோளில் தட்டி பாராட்டினார்” என்று கூறியுள்ளார். மேலும் இவரது தந்தை தான் நடிகர் சலீம்குமார் என்பதை தெரிந்து கொண்டு, “அப்பாவும் ரொம்ப நல்லா பண்றாரு.. காட் பிளஸ் யூ” என்றும் பாராட்டியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!