கைதி பாணியில் ரஜினி 171வது படத்தை திட்டமிடும் லோகேஷ்
Advertisement
Advertisement
கைதி பாணியில் ரஜினி 171வது படத்தை திட்டமிடும் லோகேஷ்
ஏப் 02, 2024
அ நிறம் | அளவு
Advertisement
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்" படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். அனிரூத் இசையமைக்கிறார். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். தொடர்ந்து தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த மாநகரம், கைதி போன்று ஒரு இரவில் நடைபெறும் கதையாக படத்தின் கதைகளம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!