சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பிறமொழி முன்னணி நடிகர்
Advertisement
Advertisement
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பிறமொழி முன்னணி நடிகர்
ஏப் 02, 2024
அ நிறம் | அளவு
Advertisement
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வில்லனாக வித்யூத் ஜம்வால் நடித்து வருகிறார். அனிரூத் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது மோகன்லால் கால்ஷீட் பிரச்னையால் நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது ஜெயராம் மற்றும் சிவராஜ்குமார் உடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!