
இந்த வாரமும் இத்தனை படங்களா? எது ஓடும்…?
இருப்பினும் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழனன்று ஏப்ரல் 4ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள "கள்வன்" படம் வருகிறது. அதற்கடுத்த தினமான வெள்ளியன்று ஏப்ரல் 5ம் தேதி “டபுள் டக்கர், ஆலகாலம், இரவின் கண்கள், கற்பு பூமியில், ஒரு தவறு செய்தால், வல்லவன் வகுத்ததடா, ஒயிட் ரோஸ்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
கடந்த வாரம் மார்ச் 29ம் தேதி கூட ஏழு படங்கள் வெளியாகின. அவற்றில் எந்த ஒரு படத்திற்கும் ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. சில படங்களின் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தகவலும் வந்துள்ளது.
ஐபிஎல், தேர்தல், தேர்வு ஆகியவற்றுடன் சேர்த்து இப்போது வெயிலும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த இன்னல் காரணமாகவும் மக்கள் பகலில் கூட அதிகம் வெளிவருவதைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியலும் வாரம் இத்தனை படங்கள் வெளியாகிறது. இவற்றில் எது ஓடும் என்பது கூட மாபெரும் கேள்வியாகவே தொடர்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!