
சூர்யாவுக்கு என்றே பிரத்யேகமாக கதை எழுதிய கார்த்திக் சுப்பராஜ்
இந்த நிலையில் தான் சூர்யாவை வைத்து அவர் படம் இயக்கப் போகிறார் என்கிற எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதால் இது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதையை எழுதி விட்டு இரண்டு மூன்று ஹீரோக்களை மனதில் வைத்துக் கொண்டு, அது சூர்யாவுக்கும் பொருத்தமாக இருக்கும், ஒருவேளை அவர் இல்லாவிட்டால் இன்னொருவர் என்கிற நோக்கில் அவர் சூர்யாவை அணுகவில்லையாம்.. இரண்டு வருடங்களுக்கு முன்பே சூர்யாவுக்காக ஒரு ஒன்லைன் தயார் செய்து அவரிடம் கூறியபோது நன்றாக இருக்கிறது இதை முழுதாக டெவலப் பண்ணுங்கள் என சூர்யா கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.
அதற்கடுத்து கார்த்திக் சுப்பராஜூம் சூர்யாவும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர். தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முடித்த பிறகு சூர்யாவுக்கான கதையை முழுவதும் சூர்யாவை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ். அதிகாரப்பூர்வமாக இந்த படம் அறிவிக்கப்படும் வரை இந்த தகவல் வெளியே கசிய கூடாது என இரு தரப்பிலும் ரகசியம் காத்து அதை சாதித்தும் இருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!