
அட்லியின் புதிய கண்டிஷன், ஆச்சரியத்தில் தெலுங்கு சினிமா
பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது அட்லி புதிய "கண்டிஷன்" ஒன்றைப் போட்டுள்ளாராம். அதன்படி படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அவருக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார் என டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர்கள் சிலர்தான் இப்படி லாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால், ஒரு இயக்குனர் இப்படி கேட்பது தெலுங்கு திரையுலகத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லா பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்தால் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!