
மீண்டும் மூன்று வேடங்களில் நடிக்கும் அஜித்
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்த படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2006ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்த அஜித், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!