
பேமிலி ஸ்டார் படத்திற்கு குஷி வரவேற்பை நம்பும் விஜய் தேவரகொண்டா
நேரடியாக தமிழில் "நோட்டா" படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படம் வெற்றி பெறாமல் போனதால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்து கடந்த ஆண்டில் வெளியான "குஷி" படம் தமிழிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பையும், மீண்டும் "கீதா கோவிந்தம்" கூட்டணி என்பதாலும் "தி பேமிலி ஸ்டார்" படத்தையும் நம்புகிறார் விஜய் தேவரகொண்டா. ஏப்ரல் 7ம் தேதி தெலுங்கு, தமிழில் மட்டும் இப்படம் வெளியாகிறது.
"கீதா கோவிந்தம்" படத்தை இயக்கிய பரசுராம் தான் "பேமிலி ஸ்டார்" படத்தையும் இயக்கியுள்ளார். அந்தப் படத்தைப் போலவே, குடும்பம், காதல் என இந்தப் படமும் உருவாகியுள்ளதாம். விஜய்யின் நம்பிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!