
சத்யா ரீமேக்கில் அசோக் செல்வன்?
இதில் சத்யா கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்கிறார் என்றும் அசோக் செல்வனை வைத்து போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா தான் இந்த படத்தை இயக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் சத்யா பட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
1988ல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா முதல் முறையாக தமிழில் சத்யா படம் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார். ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு இளையராஜாவின் இசை இன்னும் அற்புதமாக உயிரூட்டியது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!