
ஆடுஜீவிதம் பார்த்து பிரமித்து பாராட்டிய கமல் - மணிரத்னம்
கமல் பேசும்போது, “இயக்குனர் பிளஸ்சிக்கு நன்றி. இது உண்மையிலேயே ஒரு கடின உழைப்பு.. யாரோ ஒருவருக்கு நடந்திருக்கிற விஷயம் தான். மணிரத்னம் கூட எப்படி இதற்காக நீங்கள் உழைத்தீர்கள் என ஆச்சரியப்பட்டார். படத்தின் இடைவேளையின் போது இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டது. பிரித்விராஜ் மிகப்பெரிய அளவில் அதிலும் குறிப்பாக அந்த குளிக்கும் காட்சியில் பிரமிக்க வைத்துள்ளார்.
இவ்வளவு தூரத்திற்கு அவர் செல்வார் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒளிப்பதிவாளர் (சுனில் கே.எஸ்) பணி உண்மையிலேயே கடினமானது. படைப்பாளிகளாக நாங்கள் புரிந்து கொள்கிறோம். மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அருமையான படம். இந்த படத்திற்கு மக்கள் தங்கள் ஆதரவை தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இந்த படம் குறித்து தனது பாராட்டை வெளிப்படுத்தும் போது, “வியக்கத்தக்க, மூச்சை இழுத்து பிடிக்கின்ற வகையிலான காட்சிகள் மற்றும் பிரித்திவிராஜ் அற்புதமான பணியை இதில் செய்துள்ளார்"" என்று பாராட்டியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!