பிறந்தநாளில் திருப்பதியில் குடும்பத்தினர் உடன் சாமி தரிசனம் செய்த ராம் சரண்
மார் 27, 2024
Advertisement
தெலுங்கு நடிகர் ராம்சரண் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்" படத்தின் ஜருகண்டி என்ற பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷங்கரின் வழக்கமான பாணியில் பிரம்மாண்டமான செட்டுகளுடன் இந்த பாடல் கலர்புல்லாக படமாக்கப்பட்டுள்ளது. தமன் இசைஅமைத்துள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் தனது மனைவி, மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ராம்சரண். இந்த படத்தை அடுத்து புஜ்ஜி பாபு சனா இயக்கும் தனது 16வது படத்தில் நடிக்கிறார் ராம் சரண். இதில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கிறார். இதையடுத்து ராம்சரண் நடிக்கும் 17வது படத்தை புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!