
மீடியா வெளிச்சமில்லாமல் நடிகை டாப்ஸி திருமணம்
அவருக்கும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த முன்னாள் பாட்மிண்டன் வீரர், இந்நாள் இந்திய பாமிண்டன் கோச் ஆன மத்தியாஸ் போ என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று உதய்ப்பூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. மீடியா வெளிச்சமில்லாமல், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பாக சில தினங்கள் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், நடிகர் பவைல் குலாட்டி, உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள். திருமணக் கொண்டாட்டங்களின் போது கலந்து கொண்ட சில நண்பர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. டாப்ஸியின் திருமணப் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!