ரமணா லொகேஷனில் எஸ்.கே 23 படப்பிடிப்பு : ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி பதிவு
மார் 24, 2024
Advertisement
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான படம் ரமணா. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனில், விஜயகாந்த் போலீஸிடம் சரண் அடையும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 23 ஆண்டுகள் கழித்து தனது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் படப்பிடிப்பையும் இதே ரயில் நிலையத்தில் நடத்தி இருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.
அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், ‛‛மிஸ் யூ கேப்டன்"" என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!