தக் லைப் படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் கமல்
மார் 21, 2024
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக "தக் லைப்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜஸ்வர்யா லக்ஷமி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. தற்காலிகமாக இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை களம் இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் விதமாக உருவாகிறது. இதில் கமல் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!