தனது வாழ்க்கை வரலாற்று படம் : இளையராஜா நெகிழ்ச்சி பதிவு
மார் 21, 2024
Advertisement
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். நேற்று இந்த படத்திற்கு "இளையராஜா" என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் உடன் வெளியிட்டனர். படத்தின் அறிமுக விழாவிலும் கமல், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தனது வாழ்க்கை படம் பற்றி இளையராஜா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "ஆரம்பத்தில், இது எனது தனிப்பட்ட பயணமாக இருந்தது. ஆனால், இப்போது அது உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இசை ஆர்வலர்களின் இதயங்களை தொடும் கதையாக மாறுகிறது. இது வெற்றி பெற மொத்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!