
போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் ரெபல்
கடந்த வாரம் வெளியான புதிய படங்களின் சத்தம் ஓரிரு காட்சிகளுக்குக் கூட கேட்கவில்லை. இந்த வாரம் சொல்லிக் கொள்ளும்படியான நான்கைந்து படங்களாவது வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதுவரை வெளியான அறிவிப்புகளின்படி "ரெபல், சிட்டு" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது.
"ரெபல்" படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, "பிரேமலு" படப்புகழ் மமிதா பைஜு கதாநாயகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கியுள்ள இப்படம் இந்த வாரம் மார்ச் 22ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக சொல்லிக் கொள்ளும்படி எந்தப் படமும் இல்லை.
கேரளா பின்னணியில் நடக்கும் அரசியல், மலையாளிகள், தமிழர்கள் பிரச்னைகள் என இப்படம் உருவாகி உள்ளது. டிரைலர் வெளியாகி இன்னும் 10 லட்சம் பார்வைகளைக் கூடக் கடக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும் படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!