
விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள்
மார் 18, 2024
Advertisement
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விஜய் விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தனர். அதோடு படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளார்களாம். இதன் காரணமாக கோட் படத்தின் படப்பிடிப்புக்கு ரசிகர்களால் இடையூறு ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு நடத்த திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!