
சூது கவ்வும் 2ம் பாகம் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு
தற்போது சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த பாகத்தை எம் எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இவர் இயக்கிய முதல் படமான "யங் மங் சங்" இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கின்றார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை நகரை சுற்றி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 22ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!