
கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் : விஜய் ஆண்டனி விளக்கம்
இதுபற்றி விஜய் ஆண்டனி வெளியிட்ட விளக்கம் : ‛‛திராட்சை ரசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்தது. தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி உள்ளார் என்று கூறினேன். ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால் சிலரின் மனம் புண்பட்டுள்ளது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது"" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!