
‛கைதி 2 படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?
நேற்று லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது படம் ஒன்றைக் தயாரிப்பதாக மறைமுகமாக பதிவிட்டிருந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது ராம் சரண் அல்லது ஜூனியர் என்டிஆர் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி, கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் "கைதி 2" தான் என்கிறார்கள். கைதி முதல் பாகத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இரண்டாம் பாகத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறதா, இல்லையா என்பது இனி தான் தெரிய வரும். ஒருவேளை கே.வி.என் நிறுவனத்துடன் இணைந்து கூட கைதி 2 படத்தை டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!