
‛குட் பேட் அக்லி : அஜித் 63 பட தலைப்பு அறிவிப்பு
இந்த படத்திற்கு அடுத்தப்படியாக அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கு ‛குட் பேட் அக்லி" என பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். போஸ்டரில் முள் வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இதை பார்க்கையில் இந்தபடமும் ஆக் ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என தெரிகிறது. அடுத்தாண்டு பொங்கல் வெளியீடு என இப்போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் காதுக்கு கீழே சிறிய ஆபரேஷன் செய்து கொண்ட அஜித் ஓய்வில் உள்ளார். ‛விடாமுயற்சி" படத்திற்காக மீண்டும் அஜர்பைஜான் பறக்க உள்ளார். ‛விடாமுயற்சி" படத்தை முடித்ததும் ‛குட் பேட் அக்லி" படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!