
அனிருத் சினிமாவுக்கு வர காரணமே தனுஷ்தான்! -ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்ட தகவல்
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛அனிருத், 3 படத்தில் இசையமைப்பாளர் ஆனதற்கு முழு காரணமே தனுஷ்தான்" என்று கூறி இருக்கிறார்.
‛‛அனிருத்தை அவரது பெற்றோர் மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அனிருத்தின் இசை திறமையை பார்த்த தனுஷ்தான் அவருக்கு கீப்போர்டு வாங்கி கொடுத்தது மட்டுமின்றி நான் இயக்கிய 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்தார். அதனால் அனிருத் சினிமாவிற்கு வருவதற்கு தனுஷ்தான் முதல் காரணம். அதே சமயம் அவர் இத்தனை பெரிய இசையமைப்பாளர் ஆனதற்கு முழுக் காரணம் அவரது திறமைதான். அந்த வகையில் அனிருத்தின் இந்த வளர்ச்சி எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது"" என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!