
நடிகரும், இயக்குனருமான சூரிய கிரண் காலமானார்
பின்னர் தனது பெயரை சூரிய கிரண் என மாற்றி தெலுங்கில் சத்யம், பிரமாஸ்திரம் போன்ற படங்களை இயக்கினார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தமிழில் வரலட்சுமி நடிப்பில் "அரசி" என்ற படத்தை இயக்கி உள்ளார். இன்னும் இந்தப்படம் திரைக்கு வரவில்லை.
இவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(மார்ச் 11) காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. இவர் நடிகை சுஜிதாவின் சகோதரர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் (நந்தி அவார்டு) பெற்றுள்ளார் சூரிய கிரண்.
நடிகை காவேரியை திருமணம் செய்த சூரிய கிரண் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!