
கவுதம் மேனன் பெயருக்காக கூட ரசிகர்கள் வரவில்லையா ?
குறிப்பாக கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடித்த "வாரணம் ஆயிரம்", சிலம்பரசன் நடித்த "விண்ணைத் தாண்டி வருவாயா" ஆகிய படங்கள் ரீரிலீஸ் வசூலிலும், ஓடும் நாட்களிலும் சாதனை படைத்துள்ளன. இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த புதிய படமான "ஜோஷ்வா" படம் வந்த சுவடு தெரியாமல் போனது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அவரது பெயருக்காக கூட அந்த புதிய படத்தை ரசிகர்கள் பார்க்காமல், அவரது ரிலீஸ் படங்களைப் பார்க்க ஆர்வமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வெளியான "ஜோஷ்வா" படம் சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் அடுத்த சில நாட்களிலேயே தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாள் தயாரிப்பில் உள்ள விக்ரம் நடித்த "துருவ நட்சத்திரம்" படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!