
நிலாவுக்கு திருமணம்: காதலரை மணக்கிறார்
தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான "சாபட்" படத்தில் நடித்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 40 வயதாகும் மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ரஷித் என்ற மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ரிசார்ட்டில் ஒன்றில் திருமணம் நடக்க உள்ளது . நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமண தகவலை மீரா சோப்ரா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!