
இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளத்தை துவங்கி வைத்த கேரள முதல்வர்
அதேசமயம் இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவ்வப்போது போர்க் குரல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம் பிரபலமான படங்களை மட்டுமே இந்த ஓடிடி தளங்கள் வாங்குவதாகவும், சிறிய பட்ஜெட் படங்களை கண்டு கொள்வதில்லை என்பதும் சமீபகால குற்றச்சாட்டாக இருக்கிறது. அதனால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை எடுத்துவிட்டு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் பல தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக அரசாங்கம் மூலம் நடத்தப்படும் "சி ஸ்பேஸ்" என்கிற ஓடிடி தளத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்துள்ளார். கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இந்த "சி ஸ்பேஸ்" ஓடிடி தளம் செயல்பட இருக்கிறது. கலாச்சாரத்தை மேம்படுத்தக்கூடிய, நல்ல கதைய அம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களை இந்த ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட புதிய வாய்ப்பு உருவாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!