
ஓடிடியில் நேரடியாக வெளியான ரித்திகா சிங் படம்
படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் கடற்படை கேப்டன். அவர் தனது மனைவி ரித்திகா சிங் மற்றும் மகனுடன் கிருஷ்ணாப்பட்டினத்தில் ஒரு பழைய பங்களாவில் வசித்து வருகிறார். ரித்திகாவிற்கு 13 வயது சிறுவன் தன் பெற்றோர்களை கொல்வது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதை தொடர்ந்து பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தன் மகன் தன்னையும், தன் கணவரையும் கொன்று விடுவனோ அதனால்தான் இந்த கனவு வருகிறதோ என்று ரித்திகா நினைக்கிறார். உண்மையில் அந்த பங்களாவில் என்ன நடந்தது? இது ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் எப்படி தொடர்புடையது? ரித்திகாவுக்கு ஏன் இப்படி ஒரு வித்தியாசமான கனவு வருகிறது? என்பதுதான் படத்தின் கதை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!