
ஹைப்பர் லிங் கதையை கொண்ட யாவரும் நல்லவரே
படம் பற்றி இயக்குனர் ராஜேந்திர சக்ரவர்த்தி கூறியதாவது: அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் "யாவரும் வல்லவரே".
இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு வன்மம், வெறுப்புகள் வளர காரணம் எல்லோர் உள்ளும் தேங்கி இருக்கும் அன்புதான். அந்த அன்பை தொலைத்துவிட்டுதான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இந்தப் படம்.
குடும்பங்களுக்கு நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது.
திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!