
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நகுல்
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது. கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.
அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார். அவர் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார். இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. புலனாய்வு செய்யும் இன்ஸ்பெக்டராக நகுல் நடிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!