
தேர்தலுக்கு பிறகு அரசியலுக்கு வருவேன்: சத்யராஜ் மகள்
இந்நிலையில், திவ்யா சத்யராஜ்க்கு ஒரு கட்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திவ்யா சத்யராஜ் கூறியதாவது: எனக்கு அரசியல் ஆர்வம் உண்டு. நான் எம்.பி.,யாக ஆசைப்படுகிறேனா எனக்காக என் தந்தை பிரசாரம் செய்வாரா என்றெல்லாம் பலரும் கேள்வி கேட்டனர். நான் பதவிக்காகவோ, தேர்தலில் ஜெயிக்கவோ அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. மக்களுக்கு வேலை செய்யவே அரசியலுக்கு வர நினைத்தேன். நான் மகிழ்மதி இயக்கம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக களப்பணி செய்து வருகிறேன்.
இந்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. நான் தனிக்கட்சியும் ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. எந்த கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழகத்தின் நலன் காக்க உழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!