
போதைப் பொருள் வழக்கு - இயக்குனர் கிரிஷ் தலைமறைவு?
விசாரணைக்கு வருமாறு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் தலைமறைவு என அவரைப் பற்றி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் மும்பையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதனிடையே, தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். வழக்கு விசாரணைக்கு நேரில் வர கிரிஷ் தவிர்ப்பது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!