
பாலிவுட் தயாரிப்பாளர் படத்தில் நடிக்கிறார் ரஜினி
பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா. தனது குடும்பத்தினருடன் ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு ரஜினியின் திருமணநாள் தொடர்பான சந்திப்பாக கருதப்பட்டாலும், ரஜினி பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாக தெரிகிறது.
சந்திப்பு படங்களை வெளியிட்டுள்ள சஜித் இதுகுறித்து மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் "லெஜென்ட் ரஜினி சாருடன் இணைந்திருப்பது எனக்குப் பெருமையான விஷயம். இந்த மறக்க முடியாத பயணத்தை ஒன்றாகத் தொடங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்" என எழுதியுள்ளார்.
ஒருவேளை இந்தப்படம் உறுதியாகும் பட்சத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகும் என தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!