
மார்ச் 1ல் எத்தனை படங்கள் வரும்?
இவற்றில் "மங்கை" படம் வருமா என்பது சந்தேகம்தான். அப்படத்தைத் தயாரித்த திமுக பிரமுகரான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளதால் அப்படம் வெளிவருவது சந்தேகமே.
சத்யராஜ் நடித்துள்ள "தோழர் சேகுவேரா" என்ற படமும் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
அதனால், "அதோ முகம், ஜோஷ்வா, போர், சத்தமின்றி முத்தம் தா" ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் நிலை என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!