தனுஷூடன் 5வது முறையாக கூட்டணி அமைத்த பிரகாஷ் ராஜ்
பிப் 24, 2024
Advertisement
கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தனுஷ் தனது 50வது படமான "ராயன்" படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், பிரகாஷ்ராஜ் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது ஐந்தாவது முறையாக ராயன் படத்திற்காக இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!