
ரோஷினிக்கு வணங்கான் வழிகாட்டுவாரா?
8 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானாலும் ரோஷினி நடித்திருப்பது மொத்தம் 10 படங்கள்தான். "வணங்கனான்" பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ரோஷினிக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.
"வணங்கான்" படத்தை" சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
"வணங்கான்" படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள "வணங்கான்" படத்தின் டீசரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. டீசர் வெளியான ஒரே நாளிலேயே 4 மில்லியன் ரசிகர்கள் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது "வணங்கான்" படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!