
மஞ்சளில் மங்களகரமாய் மங்களூரியன் பூஜா ஹெக்டே
இன்ஸ்டாகிராம் தளத்தில் 26 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கும் பூஜா அவ்வப்போது அழகான, கிளாமரான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக பதிவிடுவார். இன்று மஞ்சள் நிறப் புடவையில் மங்களகரமாய் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “த மங்களூரியன்" எனப் பதிவிட்டுள்ளார். அவரது உறவினரது திருமணத்தில் கலந்து கொள்ள அவர் மங்களூர் வந்த போது எடுத்துள்ள புகைப்படங்கள் அவை.
பூஜாவின் பெற்றோர் மங்களூருக்கு அருகிலுள்ள உடுப்பியைச் சேர்ந்தவர்கள். உடுப்பியைச் சேர்ந்தவர்களும் அவர்களை மங்களூர்க்காரர்கள் என்று சொல்லி அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!