
பசுமை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்
பிப்ரவரி 21ம் தேதி தனது மூன்று வருட காதலர் ஜாக்கி பக்னானி என்பவரை கோவா-வில் நடைபெற உள்ள திருமண வைபவத்தில் மணந்து கொள்ள உள்ளார் ரகுல். திருமணக் கொண்டாட்டங்களை நேற்றே ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று மும்பையில் உள்ள ஜாக்கி வீட்டிற்கு ரகுல் குடும்பத்தினர் சென்றுள்ளனர். ரகுல், ஜாக்கி இருவரும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலும் வழிபாடு நடத்தி உள்ளனர்.
திருமணத்திற்கு முந்தைய மற்ற சடங்குகள் நாளை முதல் கோவாவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இத்திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம்.
ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் “புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். "இந்தியன் 2" படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!