
100 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன 96
இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 100 தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபகாலமாக ரீ-ரிலீஸ் படங்களை இளம் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இந்த வாரம் ஜெயம் ரவி நடித்த "சைரன்" படம் தவிர முக்கிய நடிகர்களின் படங்கள் வேறு வெளியாகாத காரணத்தால் "96" படத்தைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!