
தமிழுக்கு வரும் ஐஸ்வர்யா அனில் : அப்புகுட்டி ஜோடியாக நடிக்கிறார்
இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா தயாரிக்கிறார்கள். "வெடிகேட்டு" உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். கிராமத்து ஏழை தம்பதிகளின் வாழ்வியலைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!