
சமந்தாவின் பாட்காஸ்ட் பெயர் டேக் 20
இதனிடையே, கடந்த வாரம் விரைவில் "பாட்காஸ்ட்" சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். முற்றிலும் உடல்நலம் சார்ந்த ஒரு பாட்காஸ்ட் ஆக அது இருக்கும் என்றும் கூறியிருந்தார். நேற்று அந்த பாட்காஸ்ட் சேனலின் பெயர் "டேக் 20" என்றும் தன்னுடன் அல்கேஷ் என்பவரும் பேசப் போகிறார் என்றும் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
உடல்நலம் பற்றிய இந்த பாட்காஸ்டின் முதல் வீடியோ பிப்ரவரி 19ம் தேதி வெளியாக உள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் யு டியூப் சேனல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சில விளம்பரங்கள் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் உடல்நலம் குறித்த ஒரு பாட்காஸ்ட்-ஐ சமந்தா ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!