
சிம்ரன் இடத்தை பிடிப்பாரா சிம்ரன் குப்தா
ஏற்கெனவே இருந்த சிம்ரன் தன் நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டார். சிம்ரன் குப்தாவும் முறைப்படி நடனம் கற்று பல நடன நிகழ்ச்சிகளில் பட்டம் வென்றவர். இவர் சிம்ரன் இடத்தை பிடிப்பாரா என்பது போகப்போக தெரியும்.
"வித்தைக்காரன்" படத்தை ஒயிட் கார்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கி உள்ளார். சதீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்ரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து பிளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!